கடல் நீரில் இறங்கிய நடிகை ரோஜா! அவர் செருப்பை கையில் ஏந்திய ஊழியர்... வீடியோவால் சர்ச்சை
நடிகையும், ஆந்திராவின் சுற்றுலாத்துறை அமைச்சருமான ரோஜாவின் செருப்பை ஊழியர் கையில் ஏந்தியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ரோஜா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த ரோஜா, சமீபத்தில் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரோஜா தற்போது ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ளார்.
ரோஜா ஆந்திர மாநிலம் பாபட்லா சூர்யலங்கா கடற்கரைக்கு சென்றார். அங்கு ரோஜா கடல் நீரில் இறங்கி மகிழ்ச்சியுடன் கடற்கரை ஓரமாக நடந்தார். கடல் நீரில் இறங்கியபோது ரோஜாவின் செருப்பை வேலைக்காரரின் கையில் கொடுத்து இருந்தார்.
టూరిజం ఉద్యోగితో చెప్పులు మోయించిన మంత్రి రోజా | AP Tourism Employee Carrying Minister Roja Slippers#RKRoja #RojaSelvamani #YSRCP #YSJagan #Prime9News pic.twitter.com/NIHxJRmN3q
— Prime9News (@prime9news) February 10, 2023
சர்ச்சை
தற்போது இது சர்ச்சைக்குரியதாக மாறி உள்ளது. இது குறித்து சில வீடியோக்கள், புகைப்படங்கள் வெளிவந்து உள்ளது.
என்ன தான் ரோஜா அமைச்சராக இருந்தாலும் ஊழியர் அவரின் செருப்பை கையில் சுமப்பதை ஏற்க முடியாது, இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என சமூகவலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.