Rolls Royce Spectre EV இந்தியாவில் ரூ.7.5 கோடிக்கு அறிமுகம்., ஒருமுறை சார்ஜ் செய்தால் 530 கிமீ ஓடும்
சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் கார் Spectreஐ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அதி சொகுசு எலக்ட்ரிக் சூப்பர் காரான Rolls Royce Spectre EV-ன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.
Rolls Royce Spectre கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்தின் மேற்கு சசெக்ஸில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் இல்லத்தில் வெளியிடப்பட்டது, மேலும் இந்த கார் உலகம் முழுவதிலுமிருந்து அமோக வரவேற்பைப் பெற்றது.
ஸ்பெக்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 530கிமீ ஓடும்.இதில் 102kWh பேட்டரி பேக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் பேட்டரி பேக்கில் இரட்டை மின்சார மோட்டார் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காரின் நான்கு சக்கரங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது.
0 முதல் 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் அடையும்
ஸ்பெக்டரின் முன் அச்சு 254 பிஎச்பி ஆற்றலைப் பெறுகிறது. அதேசமயம் இதன் பின்புற அச்சு 482bhp ஆற்றலை உருவாக்குகிறது. இது தவிர, ஸ்பெக்டர் டோட்டல் 576bhp மற்றும் 900Nm peak Torque உருவாக்குகிறது.
Spectre 0 முதல் 100 கிமீ வேகத்தை 4.5 வினாடிகளில் எட்டிவிடும் என்று நிறுவனம் கூறுகிறது.
DC Fast Charger மூலம் 34 நிமிடங்களில் 80% சார்ஜ்
22kW AC மற்றும் 50kW முதல் 195kW DC Fast Charger ஆதரவுடன் ஸ்பெக்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. DC ஃபாஸ்ட் சார்ஜரின் உதவியுடன், வெறும் 34 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் செய்ய முடியும்.
இந்த காரின் தோற்றம் மற்றும் அம்சங்கள்
ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் கார் Rolls-Royce Wraith போலவே தோற்றமளிக்கிறது.
ஸ்பெக்டர் அகலமான மற்றும் ஒளிரும் முன் கிரில்லைக் கொண்டுள்ளது. இந்த 4 seater electric coupe, 2 கதவுகள் மற்றும் 23-இன்ச் சக்கரங்களைக் கொண்டுள்ளது.
ஸ்டார்லைட் டோர்ஸ் உட்பட பல சிறப்பு அம்சங்கள் ஸ்பெக்டரில் வழங்கப்பட்டுள்ளன, இது அதி சொகுசு காராக அமைகிறது. இது 2,975 கிலோ எடை கொண்ட ரோல்ஸ் ராய்ஸ் கார் ஆகும்.
Spectre மீதான உலகளாவிய ஈர்ப்பைக் கருத்தில் கொண்டு, அதன் தேவை 2024ல் மிக அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2030ல் Rolls Royceன் எல்லா கார்களும் மின்சார கார்களாக இருக்கும்
ஸ்பெக்டர் ரோல்ஸ் ராய்ஸ் மோட்டார் கார்களுக்கான புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 2030ஆம் ஆண்டின் இறுதியில், Rolls Royceன் எல்லா கார்களும் மின்சார கார்களாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Rolls Royce Spectre, Electric Car, Luxury car maker Rolls-Royce, Rolls-Royce first electric car Spectre, Rolls Royce Spectre in India. Rolls Royce Spectre price in india, ultra-luxury electric super coupe Specter EV, Rolls Royce Spectre Photos