தமிழகத்தில் MRO வசதியை தொடங்கும் ரோல்ஸ் ராய்ஸ் - முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஒப்பந்தம்
தமிழக முதல்வர் ஸ்டாலினின் ஐரோப்பிய பயணத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் ஐரோப்பிய பயணம்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகளை ஈர்க்க ஜேர்மனி, பிரித்தானிய உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
ஜேர்மனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.
ஜேர்மனி பயணத்தில், ரூ.7020 கோடி முதலீட்டில் 26 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகருக்கு பயணம் மேற்கொண்டார்.
ரோல்ஸ் ராய்ஸ் ஒப்பந்தம்
அங்குள்ள உலகின் முன்னணி விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் MRO வசதி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, பயிற்சி மையம் மற்றும் ஓசூரில் உள்ள IAMPL விரி வாக்கம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்ட து.
2026 ஆம் நிதி ஆண்டில் 200 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில், சென்னையில் உள்ள லாயிட்ஸ் லிஸ்ட் இன்டலி ஜென்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையத்தை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் TN RISING ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில் 3.9.2025 அன்று இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில், ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைமைப் பரிமாற்ற அலுவலர் நிக்கலோ கிராடி ஸ்மித் அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் அந்நிறுவனத்தின் விரிவாக்கப்… pic.twitter.com/ZqicabVUpX
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 4, 2025
மேலும், பிரிட்டானியா ஆர்எப்ஐடி டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனம், திருப்பூர் மற்றும் நாமக்கல்லில் அதிக திறன் கொண்ட ஆர்எப்ஐடி டேக் உற்பத்தி பிரிவை அமைக்க ரூ.520 கோடி முதலீடு மற்றும் 550 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதனை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |