ஐரோப்பாவில் முதன்முறையாக Iron Dome பாதுகாப்பு அமைப்பை வாங்கும் நாடு
இஸ்ரேலின் புகழ்பெற்ற Iron Dome வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கும் முதல் ஐரோப்பிய நாடாக ருமேனியா (Romania) அமையவுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாவதைக் காணும் நிலையில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
Iron Dome என்பது அனைத்து வானிலையிலும் செயல்படக்கூடிய, குறுகிய தூரம் மற்றும் திடீரென வரும் ஏவுகணைகள், தோட்ட குண்டுகளுக்கு எதிராக பாதுகாப்பளிக்கும் ஒரு சக்திவாய்ந்த மொபைல் ஏவுகணை தடுப்பு அமைப்பாகும்.
ருமேனியாவின் பாதுகாப்பு அமைச்சர் Ionuț Moșteanu இந்த Iron Dome பாதுகாப்பு அமைப்பு தனது நாட்டையும், நாட்டு மக்களையும் காக்கும் என நம்புகிறார்.
"இவை நம்மிடம் இல்லாத தற்காப்பு ஏவுகணை பேட்டரிகள் ஆகும், அவை நமக்குத் தேவை... ஈரானியர்கள் தாக்கும் போது டெல் அவிவ் வெளியிட்ட படங்களை நாம் பார்க்கும்போது, Iron Dome (SHORAD-VSHORAD) அந்நாட்டை பாதுகாக்கிறது தெரிகிறது. அது நம்மையும் பாதுகாக்கும், அது விமான நிலையங்களாக இருந்தாலும், இராணுவ தளங்களாக இருந்தாலும் சரி, நகரங்களை பாதுகாக்க இவை தேவை” என தெரிவித்தார்.
2025-க்கான சர்வதேச பாதுகாப்பு ஒப்பந்தம் இவ்வருடம் அக்டோபர் மாதத்தில் கையெழுத்தாகும் என Defence Industry Europe தகவல் தெரிவித்தது.
இதில், ருமேனியா மட்டும் அல்லாமல், Balkan நாடுகள் மற்றும் கருங்கடல் பாதுகாப்பு தொடர்பாக துருக்கியுடன் இணைந்து செயல்படும் நோக்கமும் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Romania Iron Dome deal, Israel Romania defence system, Iron Dome Europe first buyer, SHORAD-VSHORAD Romania, Romanian missile defence 2025, Iron Dome Black Sea strategy