ரொனால்டோவின் 5.5 மில்லியன் பவுண்ட் சொகுசு கப்பல்: காதலி ஜார்ஜினா பகிர்ந்த புகைப்படங்கள்
பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் தங்களது 5.5 மில்லியன் பவுண்ட்கள் சொகுசுகப்பலில் இருக்கும் அழகிய தருணத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளனர்.
புகைப்படங்களை பகிர்ந்த ஜார்ஜினா ரோட்ரிக்ஸ்
கடந்த 2020ம் ஆண்டு கரோனா காலத்தின் போது பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் இருவரும் தங்களது 5.5 மில்லியன் பவுண்ட்கள் சூப்பர் சொகுசு கப்பலை வாங்கி இருந்தனர்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், தற்போது ரொனால்டோவின் காதலி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், முதன்முறையாக தங்களது சொகுசு கப்பலில் ஏற்பட்ட கோடைக் கால அனுபவங்கள் குறித்த அழகிய தருணங்கள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
georginagio/Instagram
இன்ஸ்டாகிராமில் 48.6 மில்லியன் பின் தொடர்பாளர்களை கொண்ட ஜார்ஜினா ரோட்ரிக்ஸ், “கோடை மதியத்தில் எங்கள் படகை வாங்கச் சென்றபோது, அந்த மாயாஜால கோடையின் சில புகைப்படங்கள்... அழகான வானிலையின் அழகிய காட்சி. #2020." என புகைப்படத்துடன் இணையத்தில் ரசிகர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
அதில் ரொனால்டோ மற்றும் ரோட்ரிக்ஸ் இருவரும் தங்களது கப்பலை பார்த்தப்படி நிற்கும் புகைப்படங்கள் மற்றும் இருவரும் முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் புகைப்படங்கள் ஆகியவை பகிரப்பட்டுள்ளன.
georginagio/Instagram
சொகுசு கப்பலின் வசதிகள்
சுமார் 5.5 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள அசிமுட் கிராண்டே என்ற சூப்பர் சொகுசு கப்பலில், 5 ஆடம்பர அறைகள், 6 குளியலறைகள் கொண்டுள்ளது.
1,900 குதிரைத்திறன் கொண்ட ஒரு ஜோடி இயந்திரங்கள் மூலமாக இயங்கும் கப்பல், கிட்டத்தட்ட 28 knots வேகத்தில் பயணக்க கூடியது.
அத்துடன் அசிமுட் கிராண்டே கப்பலில், நவீன சமையலறை, 2 ஓய்வு பகுதிகள், தனி சாப்பாட்டு அறை ஆகியவையுடன், விளையாட்டிற்கான வசதிகளும் உள்ளது.
georginagio/Instagram