அல் நஸர் கிளப்பில் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய ரொனால்டோ: வீடியோ
சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப்பில் பல மில்லியன் தொகைக்கு ஒப்பந்தம் செய்த பிறகு, முதல் முறையாக கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தன்னுடைய முதல் பிறந்த நாளை அல் நஸர் கிளப் வீரர்களுடன் கொண்டாடினார்.
அல் நஸர் கிளப்
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிளவு பிறகு, தனது 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப்புடன் இணைந்தார்.
இதையடுத்து அவர் சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டிகளில் விளையாடி வருகிறார். அல் நஸர் கிளப்பிற்காக களமிறங்கிய தொடக்க போட்டிகளில் ரொனால்டோ கோல் அடிக்காததால், பல பில்லியன் தொகைக்கு அவரை வாங்கியது தொடர்பான விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவர தொடங்கின.
Ronaldo celebrates his first birthday in his new home ?
— AlNassr FC (@AlNassrFC_EN) February 6, 2023
Happy Birthday to our Captain @Cristiano ??
Wishing you another year full of achievements ? pic.twitter.com/KyjbNDFd3H
ஆனால் கடந்த 3ம் திகதி அல் பாடெஹ் அணிக்கு எதிரான போட்டியில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ரொனால்டோ தனது முதல் கோலை அல் நஸர் அணிக்காக அடித்து அசத்தினார், மேலும் இந்த கோல் மூலம் அல் நஸர் அணியை தோல்வியில் இருந்து ரொனால்டோ காப்பாற்றினார்.
அல் நஸர் அணியுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரொனால்டோ
இந்நிலையில் ரொனால்டோ பிப்ரவரி 5ம் திகதி தனது முதல் பிறந்தநாளை அல் நஸர் கிளப்புடன் இணைந்து கொண்டாடினார்.
பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு இருந்த அல் நஸர், “எங்கள் கேப்டன் கிறிஸ்டியானோ-வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள், சாதனைகள் நிறைந்த மற்றொரு ஆண்டாக இருக்க வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளது.
Twitter
மேலும் இந்த வீடியோவில் ரொனால்டோ அல் நஸர் கிளப்பின் சக வீரர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.