சவுதி அரேபியாவின் திருமண சட்டங்களால்...ரொனால்டோ மற்றும் அவரது காதலிக்கு வந்துள்ள சோதனை
சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சட்டவிரோதம் என்ற நிலையில், அல்-நாசர் கிளப்பில் இணைந்துள்ள கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலியுடன் லிவ்-இன் உறவில் இருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது.
அல்-நாசர் கிளப்பில் ரொனால்டோ
போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியேறிய பிறகு, தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார்.
அல் நாசர் அணிக்காக 2025ம் ஆண்டு வரை ஒப்பந்தம் ஆகியுள்ள ரொனால்டோ வருடத்திற்கு 200 மில்லியன் பவுண்டுகள் ஊதியம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Can’t wait to get started! ?? pic.twitter.com/Zow3eQ3S44
— AlNassr FC (@AlNassrFC_EN) December 31, 2022
கடந்த திங்கட்கிழமையன்று, சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத் சென்றடைந்த ரொனால்டோவுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்த நாள், அல்-நாசர் கிளப்பின் மைதானத்திலும் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரொனால்டோவால் ஏற்பட்டுள்ள குழப்பம்
சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளாமல் ஆண் பெண் இருவர் ஒரே வீட்டில் வாழ்வது சட்டவிரோதமான நடவடிக்கை ஆகும், அப்படி இருக்கையில் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் அவருடைய காதலி ஜார்ஜினா ரோட்ரிகஸும் திருமணம் செய்துகொள்ளாமல் லிவிங் டூ கெதர் உறவில் வாழ்ந்து வருவது சர்ச்சையாகியுள்ளது.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மேலும் ரொனால்டோவுக்கு இரட்டையர்கள் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரொனால்டோவும் அவரது காதலி ஜார்ஜினாவும் இதற்காக தண்டிக்கப்படுவார்களா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இதற்காக இருவரும் தண்டிக்கப்பட போவதில்லை என பெருவாரியான ஆதாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஸ்பானிய செய்தி நிறுவனம் இஎஃப்இ வெளியிட்டுள்ள தகவலில், சவுதி அரேபியாவில் இந்த முறை சட்டவிரோதமாக கருதப்பட்டாலும், ரொனால்டோ பிரபலமான கால்பந்தாட்ட வீரர் என்பதாலும், அவர் வெளிநாட்டவர் என்பதாலும் அவர் இதற்காக தண்டிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தெரியவந்துள்ளது.
சவுதி வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்த கருத்தில், சவுதி அரேபியா வெளிநாட்டவர்கள் காரியங்களில் இது போன்று தலையிடுவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.