விற்பனை உதவியாளராக இருந்து பல மில்லியன் டொலருக்கு..ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா
கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிகஸ் குறித்த தகவல்களை இங்கே காண்போம்.
கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால உறவுக்கு பின், கிறிஸ்டியானோ ரொனால்டோவை திருமணம் செய்துள்ள ஜார்ஜினா ரோட்ரிகஸ், The Gucci விற்பனை உதவியாளராக இருந்து தற்போது பல மில்லியன் டொலர் மதிப்புள்ள ஆளுமையாக உயர்ந்துள்ளார்.
ரொனால்டோ, ஜார்ஜினா திருமணம்
போர்த்துக்கலின் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo), அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜார்ஜினா ரோட்ரிகஸுடன் (Georgina Rodriguez) திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார்.
சுமார் 10 ஆண்டுகளாக உறவில் இருந்த இந்த ஜோடி, போர்த்துகலின் காஸ்காய்ஸ் நகரில் திருமணம் செய்துகொண்டது.
யார் இந்த ஜார்ஜினா ரோட்ரிகஸ்?
அர்ஜென்டினாவில் பிறந்த 32 வயதாகும் ஜார்ஜினா ரோட்ரிகஸ், The Gucci விற்பனை உதவியாளராக இருந்தவர்.
மேலும் ஸ்பானிய மொடலாகவும் இருந்த ஜார்ஜினா, ஸ்பெயினின் வடகிழக்கில் அமைந்துள்ள ஜாகா என்ற நகரத்தில் தனது இளமைப் பருவத்தைக் கழித்தார்.
நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜார்ஜினா, தனது குழந்தைப் பருவத்தில் இருந்தே பாலே நடனம் பயின்றார். எனினும், நிதி நெருக்கடியால் அவரால் நீண்ட காலம் தொழில்முறைப் பயிற்சிகளை மேற்கொள்ள முடியவில்லை.

பின்னாளில் இங்கிலாந்தின் பிரிஸ்டாலுக்கு குடிபெயர்ந்த அவர், அங்கு ஆங்கில மொழியில் தேர்ச்சி பெறுவதற்காக ஒரு au pair ஆக பணியாற்றினார்.
அதனைத் தொடர்ந்து, ஸ்பெயினுக்கு திரும்பிய ஜார்ஜினா, ஆடம்பர ஆடை சில்லறை வர்த்தகத்தில் ஒரு தொழிலைக் கட்டமைப்பதற்காக மாட்ரிட் நகரில் குடியேறினார்.
முதன்முதலில் ரொனால்டோவை சந்தித்த ஜார்ஜினா
அங்குதான் ஜார்ஜினா The Gucci boutique-யில் குறைந்தபட்ச ஊதிய விற்பனை உதவியாளராக பணியாற்றினார். 2016-யில் அந்த கடையில்தான் ரொனால்டோவை முதன்முதலில் ஜார்ஜினா சந்தித்தார்.

சில நாட்களுக்குப் பிறகு ஒரு பிரத்யேக பிராண்ட் நிகழ்வில் இருவரும் மீண்டும் இணைந்தனர். பின்னர் இவர்கள் காதலிக்கத் தொடங்கினர்.
இந்த விடயம் ஊடகங்களில் தீயாய் பரவ, ஜார்ஜினா தனது சில்லறை விற்பனைத் தொழிலில் இருந்து இரண்டு முறை விலகும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்.
என்றாலும், அவருக்கு கிடைத்த ரொனால்டோவின் காதலி என்ற உலகளாவிய வெளிச்சத்தை அவர், தனது சர்வதேச மொடலிங் மற்றும் ஊடக வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டார்.
தற்போது அவர், Influencer மற்றும் தொழில்முனைவோர், ஒரு சுயாதீனமான தொழில் வாழ்க்கையையும் பல மில்லியன் டொலர் மதிப்புள்ள பிராண்ட் சாம்ராஜ்யத்தையும் கட்டமைத்துள்ளார்.
பிரத்யேக மாளிகை
ஜார்ஜினா, ரொனால்டோ தம்பதியினர் தங்களது தனியுரிமையைப் பேண, ஊடகங்களின் கமெராக்களில் இருந்து விலகி இருந்தாலும், குயின்டா டா மரின்ஹாவில் உள்ள தனிப்பட்ட மாளிகையே அவர்களது முதன்மை இடமாக இருந்ததாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக புதிதாக கட்டப்பட்ட இந்த பிரத்யேக மாளிகை, சுமார் 12,000 சதுர மீற்றர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இதில் 8 படுக்கையறைகள், 300 சதுர மீற்றர் பரப்பளவுள்ள ஒரு முதன்மை அறைத்தொகுதி, நீச்சல் குளங்கள், ஒரு உடற்பயிற்சிக் கூடம், ஒரு ஸ்பா, ஒரு திரைப்பட அரங்கம், ஒரு பந்துவீச்சு அரங்கம் மற்றும் ஒரு தரைக்கீழ் வாகன நிறுத்துமிடம் ஆகியவை உள்ளன.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |