சிறுவனின் செல்போனை உடைத்த கால்பந்து வீரர் ரொனால்டோ...குவியும் எதிர்ப்புகள்: வெளியான வீடியோ
- ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவனின் கையிலிருந்து செல்போனை தட்டிவிட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ.
- பள்ளி மாணவனுக்கு இழப்பீடு வழங்க ரொனால்டோ ஒப்புக்கொண்டதாக தகவல்
பிரபல மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவனின் கையிலிருந்து செல்போனை தட்டிவிட்டு உடைத்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணி பார்க்கில் எவர்டனில் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பின்னர், ஆடுகளத்தை விட்டு வெளியேறிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆட்டிசம் பாதிக்கப்பட்ட ஜேக்கப் ஹார்டிங்கின் என்ற சிறுவனின் கையிலிருந்து செல்போனை ஆக்ரோசஷமாக தட்டிவிட்டார்.
இதனைத் தொடர்ந்து Merseyside பொலிசார் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ஏப்ரல் 9 சனிக்கிழமையன்று குடிசன் பார்க்கில் எவர்டன் v மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து போட்டியைத் தொடர்ந்து நடந்த சம்பவம் தொடர்பாக நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எச்சரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
New angle showing @cristiano Ronaldo smash a phone out of a 14 year old child’s hand after @manchesterunited defeat.
— Around Liverpool (@aroundliv) April 10, 2022
The father of 4 has since apologised for his “outburst” without going into any detail of what he had done in an Instagram post. pic.twitter.com/NpzFI7G8sI
மேலும் இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்து இருப்பதாகவும், பள்ளி மாணவனுக்கு இழப்பீடு வழங்க ரொனால்டோ ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுத் தொடர்பாக சிறுவனின் தாயார் சாரா கெல்லி தெரிவித்த தகவலில், ஆட்டத்தின் முழு நேர முடிவில் யுனைடெட் வீரர்கள் வெளியேறத் தொடங்கினர், அப்போது நாங்கள் வீரர்கள் செல்லும் பாதையில் சரியாக இருந்தோம், என் மகனும் அங்கே இருந்தான், அவை அனைத்தையும் வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தான், அப்போது ரொனால்டோ பயங்கரமான கோபத்துடன் எனது மகனின் கையில் இருந்த செல்போனை தட்டிவிட்டு உடைத்தார். எனத் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரிய ரொனால்டோ, நாம் எதிர்கொள்ளும் கடினமான தருணங்களில் உணர்ச்சிகளைச் சமாளிப்பது ஒருபோதும் எளிதானது அல்ல. இருப்பினும், நாம் எப்போதும் மரியாதையுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டும் மற்றும் அழகான விளையாட்டை விரும்பும் அனைத்து இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
கூடுதல் செய்திகளுக்கு: கத்தியுடன் தப்பி ஓடும் கொலையாளி...87 வயது முதியவருக்கு ஏற்பட்ட பரிதாபம்: வெளியான புகைப்படம்
மேலும் எனது கோபத்திற்கு நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன், முடிந்தால், இந்த ஆதரவாளரை நியாயமான விளையாட்டு மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றின் அடையாளமாக ஓல்ட் டிராஃபோர்டில் ஒரு ஆட்டத்தைப் பார்க்க அழைக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.