விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் - கிறிஸ்டியானோ ரொனால்டோ
இன்டர் மிலன் அணிக்கு எதிரான போட்டியை டிரா செய்தது குறித்து அல் நஸர் நட்சத்திரம் ரொனால்டோ ட்வீட் செய்துள்ளார்.
டிராவில் முடிந்த போட்டி
அல்-நஸர் மற்றும் இன்டர் மிலன் அணிகளுக்கு இடையிலான நட்புமுறை கால்பந்து போட்டி ஜப்பானின் Nagai மைதானத்தில் நடந்தது.
இரு அணிகளும் சமபலத்துடன் மோதிய இந்தப் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது. அல்-நஸரின் அப்துல்ரஹ்மான் கரீப் (23), இன்டர் மிலனின் டேவிட் பிரடேஸி தலா ஒரு கோல் அடித்தனர்.
ரொனால்டோ ட்வீட்
இந்தப் போட்டி குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ ட்வீட் செய்துள்ளார். அவரது பதிவில், 'மற்றொரு நல்ல சோதனை இது. நாங்கள் தொடர்ந்து மேம்படுகிறோம்! நம்ப முடியாத ஆதரவு அளித்த ஜப்பானில் உள்ள அனைத்து ரசிகர்களும் நன்றி! விரைவில் உங்களை மீண்டும் சந்திப்பேன் என்று நம்புகிறேன்!' என தெரிவித்துள்ளார்.
Another good test. We keep improving!??
— Cristiano Ronaldo (@Cristiano) July 27, 2023
Thank you to all the fans here in Japan for the incredible support!
Hope to see you again soon!???? pic.twitter.com/o8jxOfvmM1
29ஆம் திகதி நடக்க உள்ள அரப் கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் அல் நஸர் அணி அல் ஷபாப் அணியை எதிர்கொள்கிறது.
AFP
alnassr.sa/ist
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |