இத்தாலியே வெல்லும்... அன்றே சொன்ன ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
நடந்து முடிந்த யூரோ கிண்ணம் கால்பந்து இறுதிப்போட்டியில் இத்தாலியே வெல்ல வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய தலைவரான Ursula von der Leyen அன்றே விருப்பம் தெரிவித்திருந்தார்.
ஞாயிறன்று நடந்து முடிந்த யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.
இது ஒட்டு மொத்த பிரித்தானியர்களையும் உலுக்கியுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றிய தலைவரான Ursula von der Leyen வெள்ளிகிழமை கூறிய கருத்துகள் தற்போது முக்கியத்துவம் பெறுகிறது.
அதில் அவர், தமது இதயம் ஸ்குவாட்ரா அஸ்ஸுர்ரா அணியுடன் இருப்பதாகவும், இத்தாலியே வெல்ல வேண்டும் எனவும் தமது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.
27 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகிகள் பொதுவாக குறிப்பிட்ட நாட்டுக்கு ஆதரவாக கருத்து கூறுவதில்லை என்ற போதும்,
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறியுள்ளதால் Ursula von der Leyen இத்தாலிக்கு ஆதரவாக, யூரோ கிண்ணம் இறுதிப்போட்டியில் கருத்து தெரிவித்திருக்கலாம் என்றே கூறப்படுகிறது.