பிறந்தநாள் கொண்டாடும் ஒரு இளவரசர்: கணக்காளரின் செயலால் களை இழந்த அரண்மனை
மொனாக்கோ இளவரசர் ஆல்பர்ட் தமது 66வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், அரண்மனை கணக்காளர் காரணமாக மொத்த கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அளவு கடந்த செலவுகள்
பொதுவாக மொனாக்கோ அரச குடும்பத்து பிறந்தநாள் விழாக்கள் பெரும் கொண்டாட்டமாகவே முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு மொத்த கொண்டாட்டங்களையும் ரத்து செய்துள்ளார் இளவரசர் ஆல்பர்ட்.
@getty
அவரது குடும்ப உறுப்பினர்களின் அளவு கடந்த செலவுகள் பொதுவெளியில் அம்பலாமனதே காரணமாக கூறப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளாக இளவரசர் ஆல்பர்ட் குடும்பத்தின் கணக்காளராக இருந்து வந்தவர் Claude Palmero.
மிகவும் நம்பிக்கைக்குரியவரான இவரை பொறுப்பில் இருந்து சமீபத்தில் நீக்கியுள்ளார் இளவரசர் ஆல்பர்ட். இணைய பக்கம் ஒன்றில் மொனாக்கோ அரச குடும்பத்து கணக்கு வழக்குகள் அனைத்தும் அம்பலமான நிலையிலேயே Claude Palmero- வை இளவரசர் ஆல்பர்ட் நீக்கியுள்ளார்.
2 பில்லியன் பவுண்டுகள்
அம்பலமான தரவுகளில், இளவரசர் ஆல்பர்ட்டின் 46 வயதான மனைவியின் அளவு கடந்த செலவுகளும் வெளிச்சத்துக்கு வந்தது. ஆண்டுக்கு 1.2 மில்லியன் பவுண்டுகள் உதவித்தொகை பெற்றுவந்த போதும், அடிக்கடி அவர் கடனில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
@getty
2011ல் திருமணத்திற்கு முன்னரே 60,000 பவுண்டுகள் தொகையை அவர் கைப்பற்றியுள்ளார். ஏப்ரல் 2016ல் 70,000 பவுண்டுகள் தொகையை பணமாக கைப்பற்றியுள்ளார்.
2022ல் இளவரசி Charlene-ன் சகோதரர் குடியிருப்பு ஒன்றை வாங்குவதற்காக 786,000 பவுண்டுகள் தொகையை மொனாக்கோ அரச குடும்பம் வழங்கியுள்ளது. மேலும், இளவரசர் ஆல்பர்ட்டின் இரு சகோதரிகருக்கு ஆண்டுக்கு 680,000 பவுண்டுகள் மற்றும் 770,000 பவுண்டுகள் என உரிமைத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
மொனாக்கோவை ஆளும் Grimaldi குடும்பத்திற்கு தோராயமாக 2 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்பு இருக்கலாம் என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |