Royal Enfield-ன் முதல் மின்சார மோட்டார்சைக்கிள் - Flying Flea C6 சிறப்பம்சங்கள்
இந்திய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளான Flying Flea C6-ஐ இந்தியாவில் காட்சிப்படுத்தியது.
இந்த மாடல் முதன்முதலில் 2024-ஆம் ஆண்டு மிலானில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின்போது பிரிட்டிஷ் இராணுவத்தில் பயன்படுத்தப்பட்ட பூர்வீக Flying Flea மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட புதிய மின்சார மோட்டார் சைக்கிள் இதுவாகும். இந்த பைக் நகர்ப்புற போக்குவரத்துக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
Royal Enfield Flying Flea C6 வடிவமைப்பு
Flying Flea C6-ன் ஒட்டுமொத்த கட்டமைப்பு, குறைந்த எடை மற்றும் அதிக வலிமையை வழங்குகிறது.
Magnesium battery case எடையை குறைத்து, தணிக்கையை மேம்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின் பகுதியில் பாரம்பரியம் பிரதிபலிக்க, முன்புறத்தில் நவீன தொழில்நுட்பத்தை சுட்டிக்காட்டும் வகையில் வித்தியாசமான fins வடிவமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மாடலில் சுற்றியுள்ள ஹெட்லைட், ஒற்றை இருக்கை மற்றும் கூடுதலாக பின் இருக்கை விருப்பமாக வழங்கப்படும்.
இயந்திர அமைப்பு
இந்த மோட்டார் சைக்கிளில் girder fork suspension உள்ளது, இது மிகவும் அபூர்வமான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ஒன்றாகும். இது நகர்ப்புற சூழலில் மோட்டார் சைக்கிளின் நிலைத்தன்மை மற்றும் வசதியை மேம்படுத்தும்.
தொழில்நுட்ப அம்சங்கள்
மோட்டார், பேட்டரி தொடர்பான விவரங்களை ராயல் என்ஃபீல்டு வெளியிடவில்லை. இருப்பினும், மையக் கட்டுப்பாட்டு அமைப்பான Vehicle Control Unit (VCU) இதில் வழங்கப்பட்டுள்ளது.
இது மோட்டார் செயல்பாட்டை சிறப்பாக மாற்றி அமைத்து, பயண அனுபவத்தை மேம்படுத்தும். மேலும், தொலைபேசி வழியாகக் கட்டுப்படுத்தும் வசதி இதில் உள்ளது.
Flying Flea C6 சிறப்பம்சங்கள்
Cornering ABS, cruise control, traction control, LED lighting, digital display போன்ற தொழில்நுட்ப அம்சங்கள் இதில் உள்ளன.
மேலும், Qualcomm Snapdragon QWM2290 சிப், Car-to-Cloud கொண்டுள்ளதால், இணைக்கப்பட்ட சேவைகளை வழங்கும் முதல் இருசக்கர வாகனங்களில் ஒன்றாக இது இருக்கும்.
இந்த மோட்டார் சைக்கிள் ஒரு three-pin plug மூலம் சார்ஜ் செய்யும் வசதியுடன் வருகிறது, இது சாதாரண பயனர்களுக்கு எளிதாக இருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Royal Enfield EV Bike, Royal Enfield Electric Motorcycle, Royal Enfield Flying Flea C6, Royal Enfield first Electric Motorcycle