அரச குடும்பத்தின் மிகவும் மூத்த உறுப்பினர்... இளவரசி மிகாசா மரணம்
ஜப்பான் அரச குடும்பத்தின் மிகவும் மூத்த உறுப்பினரான இளவரசி மிகாசா காலமானதாக அரச குடும்பம் தகவல் வெளியிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது
டோக்கியோவில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலமான அவருக்கு வயது 101 என்றே கூறப்படுகிறது. பக்கவாதம் மற்றும் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு கடந்த மார்ச் மாத்தில் இருந்தே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சையில் சிகிச்சை பெற்று குணமடைந்தும் வந்தார்.
ஆனால் நவம்பர் தொடக்கத்தில் மீண்டும் அவரது உடல் நிலை மோசமடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் மரணமடைந்துள்ளார். 1923 ஜூன் மாதம் பிறந்த இளவரசி மிகாசா, தனது 18வது வயதில் பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரை திருமணம் செய்துகொண்டார்.
இந்த தம்பதிக்கு 5 பிள்ளைகள். இரண்டாம் உலகப் போரின் போது 1944ல் தனது முதல் பிள்ளையை அவர் பெற்றெடுத்துள்ளார். அமெரிக்காவின் வான் தாக்குதலில் அரண்மனை தரைமட்டமாக, பிறந்த குழந்தையுடன் முகாம் ஒன்றில் தங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மிகாசாவின் மூன்று மகன்களும்
இளவரசி மிகாசாவின் கணவர் தமது 100வது வயதில் கடந்த 2016ல் மரணமடைந்துள்ளார். இளவரசி மிகாசாவின் மூன்று மகன்களும் அவருக்கு முன்பே இறந்துவிட்டனர்.
அதில் ஒருவர், கனேடிய தூதரகத்தில் ஸ்குவாஷ் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், தமது 47 வயதில் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |