ஜெய்ஸ்வால் அதிரடி! பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான்
பாஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் துடுப்பாட தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஷிகர் தவனும் களமிறங்கினர். தவன் 12 ஓட்டங்களில் வெளியேறினார். பொறுப்புடன் விளையாடிய பேர்ஸ்டோ அரைசதம் கடந்தார். அவர் 56 ஓட்டங்களில் அவுட்டானார்.
மலிங்காவின் மிகப்பெரிய சாதனையை எட்டிப்பிடித்த சாஹல்!
அடுத்து வந்த ராஜபக்ச 27 ஓட்டங்களிலும், கேப்டன் மயங்க் அகர்வால் 15 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இறுதியில் ஜிதேஷ் சர்மா (38) அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 189 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் சாஹல் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து 190 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கினர்.
இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். பட்லர் 16 பந்துகளில் 30 ஓட்டங்கள் திரட்டி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ஓட்டத்திலும், படிக்கல் 31 ஓட்டங்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.
அவமானமாக தோன்றும்.. தோனிக்கு கேப்டன் பதவியை விட்டுக்கொடுத்தது குறித்து முன்னாள் வீரர் கருத்து!
Take an opportunity and grab it with all you’ve got.@yashasvi_j ?? pic.twitter.com/SlDy8gQAfV
— Rajasthan Royals (@rajasthanroyals) May 7, 2022
பொறுப்புடன் விளையாடிய ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்தார். அணியின் வெற்றிக்கு தேவையான பங்களிப்பை அளித்த அவர், 68 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில் ஹெட்மையர்(31) அதிரடியுடன் விளையாடி ஆட்டத்தை வெற்றியுடன் முடித்துவைத்தார். முடிவில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் மட்டும் இழந்து இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
லண்டனில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை தண்டனை!