சூடானில் 72 மணிநேர போர் நிறுத்தம் அறிவிப்பு! RSF வெளியிட்ட அறிக்கை
உள்நாட்டு போர் நடந்து வரும் சூடானில், தற்காலிக போர் நிறுத்தத்தை துணை ராணுவப்படை அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம்
Eid al-Fitrக்கு போர் நிறுத்தத்தைக் கடைப்பிடிக்குமாறு சூடானின் போரிடும் பிரிவுகளுக்கு உலக தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து துணை ராணுவப்படையான RSF தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
@AFP
வெளியான அறிக்கை
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 72 மணிநேர போர்நிறுத்தத்தை கடைபிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்து. இது இஸ்லாம் விடுமுறையான Eid al-Fitrயின் தொடக்கத்தைக் குறிப்பதாக கூறப்படுகிறது.
ஆனால், போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுமா என்பது குறித்து ராணுவத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை. முன்னதாக, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டரெஸ், பொதுமக்கள் பாதுகாப்பை அடைய அனுமதிக்கவும், போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கவும் என அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
@AFP