சூடானில் RSF நடத்திய பயங்கரமான படுகொலை தாக்குதல்: 124 பேர் உயிரிழப்பு, 150 பேர் கைது!
சூடான் நாட்டின் உள்நாட்டு போரில் நடைபெற்ற படுகொலை தாக்குதலில் 124 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
சூடான் உள்நாட்டுப் போர்
சூடான் நாட்டு தலைநகர் கார்தூமிற்கு தெற்கே உள்ள ஒரு கிராமத்தில் ராபிட் சப்போர்ட் ஃபோர்ஸ்கள் (RSF) ஒரு கொடூரமான படுகொலையை நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்த இந்த தாக்கில் குறைந்தது 124 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது நீடித்து வரும் உள்நாட்டுப் போரில் மிக மோசமான ஒற்றைச் சம்பவங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருதரப்பு மோதல்
RSF என்ற துணை இராணுவக் குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் சூடான் ஆயுதப் படைகளுடன் (SAF) கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகிறது.
இரு தரப்புகளும் குடிமக்களுக்கு எதிரான பல கொடூரங்களை செய்து வருகிறது, இதில் சட்டவிரோத கொலைகள், இடப்பெயர்வு மற்றும் கட்டமைப்புகளை அழித்தல் ஆகியவை அடங்கும்.
எதிர்ப்பு குழு உறுப்பினர்களில் ஒருவர் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 150 பேரை RSF கைது செய்து இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |