பூட்ஸால் இளைஞர்களை தூண்டுகிறார்கள்! ஆப்கான் பெண்களுக்கு தலிபான் விதித்த கடுமையான கட்டுப்பாடுகள்
பெண்களின் பூட்ஸ் காலணியில் இருந்து வரும் சத்தம் இளைஞர்களை தவறு செய்ய தூண்டுகிறது என தலிபான் ஊடகப் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நாள் முதல், பெண்கள் நாட்டின் பல்வேறு மாகாணங்ளில் தங்கள் உரிமைக்காக தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
ஆனால், போராடிய பெண்களை அடித்து துன்புறுத்தியும், துப்பாக்கியால் சுட்டும் தலிபான் போராளிகள் விரட்டியடித்தனர். நாட்டை கைப்பற்றி உடன் ஷாரிய சட்டத்தின் படி நாட்டில் பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என கூறிய தலிபான், தற்போது மாணவிகளை பள்ளிகளில் அனுமதிக்காமல் பெண்களின் சுதந்திரத்தை உரிமையை பறித்து வருகிறது.
அதுமட்டுமின்றி தலிபான் அரசு பெண்களுக்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே சமீபத்தில் TOLO நியூஸில் நடந்த விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட தலிபான் ஊடகப் பேச்சாளர், ஆப்கான் பெண்களுக்கான சில சிறப்பு கட்டுப்பாடுகளை விவரித்தார்.
முதல் கட்டுப்பாடு பெண்கள் அணியும் ஆடையின் நிறம் மிகவும் கவரும் வகையில் இருக்கக்கூடாது. அது மக்களின் கவனத்தை ஈரக்கக்கூடாது.
இரண்டாவது, பெண்கள் வெளியே வரும் போது வாசனை திரவியங்களை பயன்படுத்தக்கூடாது.
மூன்றாவது, பெரிய பூட்ஸ் காலணி அணியக்கூடாது மற்றும் பூட்ஸிலிருந்து சத்தம் வரக்கூடாது.
பூட்ஸிலிருந்து வரும் சத்தம் ஒருவிதமான அறிவிப்பு. இது பெண்கள் இளைஞர்களுக்கு விடுக்கும் சிக்னல், இதுபோன்ற பூட்ஸ் சத்தத்தால் பெண்கள் இளைஞர்களை தவறான செயலில் ஈடுபட தூண்டுகின்றனர் என கூறினார்.