ஜுன் 1 முதல் அமுலுக்கு வரும் விதிகள்.. Driving license, Aadhaar முதல் சிலிண்டர் வரை
வரும் ஜுன் 1 -ம் திகதி முதல் இந்தியாவில் அமுலுக்கு வரவுள்ள சில விடயங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எரிவாயு சிலிண்டர் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கருத்தில் கொண்டும், ஒவ்வொரு மாதத்தின் ஒன்றாம் திகதியை வைத்தும் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
அதன்படி, திருத்தி அமைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர் விலையானது மாதத்தின் முதல் திகதி காலையில் வெளியிடப்படுகிறது. அதேபோல வரும் மாதம் ஜூன் 1 -ம் திகதியும் எரிவாயு சிலிண்டர் விலை வெளியிடப்படும்.
அந்தவகையில், 14 கி எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் 19 கி வணிக சிலிண்டர்களின் விலை மாற்றியமைக்கப்படவுள்ளது.
ஆதார் அட்டை
ஆதார் அட்டையை இலவசமாகப் புதுப்பிப்பதற்கான திகதி ஜூன் -14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது நாம் எந்தவொரு கட்டணமும் இல்லாமல் ஆதாரை புதுப்பிக்கலாம்.
இதுவே நீங்கள் ஆதார் மையத்திற்குச் சென்று திருத்தங்களை மேற்கொண்டால், ஒவ்வொரு திருத்தத்திற்கும் ரூ.50 கட்டணம் கொடுக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம்
ஜூன் 1 -ம் திகதி முதல் ஓட்டுநர் உரிமத்தை பெறுவதற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்ல வேண்டியதில்லை. டிரைவிங் ஸ்கூலுக்குச் சென்று ஓட்டுநர் உரிமைத்தை பெற்றுக்கொள்ளலாம்.
அதாவது புதிய விதியின்படி, ஆர்டிஓவிடம் சென்று தேர்வு எழுதாமல், அங்கீகரிக்கப்பட்ட தனியார் ஓட்டுநர் நிறுவனத்தில் இருந்து தேர்வில் தேர்ச்சி பெறலாம்.
ரூ.25,000 அபராதம்
ஜூன் 1 -ம் திகதியில் இருந்து 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000 வரை அபராதம் செலுத்த வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |