ட்ரம்பின் வெற்றி... உக்ரைன் ஆதரவை ஐரோப்பிய நாடுகள் மறுபரிசீலனை செய்யத் தூண்டும்
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் தெரிவானால், உக்ரைன் மீதான ஆதரவை ஐரோப்பிய நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஹங்கேரிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் போர் சுமைகள்
டொனால்டு ட்ரம்பின் மிகப்பெரிய ஆதரவாளரான ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், ஐரோப்பிய கண்டம் மட்டும் உக்ரைன் போர் சுமைகளை தனித்து தாங்க முடியாது என்றார்.
இதனால் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், உக்ரைனுக்கு ஆதரவளிப்பது குறித்து ஐரோப்பா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை அளிப்பதில் தொடர்ந்து எதிர்த்துவரும் விக்டர் ஓர்பன், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பும் தமது கருத்தை ஏற்பார் என்றே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனுக்கான சமாதானத் தீர்வுக்கு பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் தயார் என தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை நடக்கவிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், டொனால்டு ட்ரம்ப் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என குறிப்பிடும் விக்டர் ஓர்பன்,
ஆதரவாக இருக்க முடியாது
நாம் ஐரோப்பியர்கள் அமெரிக்காவில் அமைதிக்கு ஆதரவான ஒரு ஜனாதிபதி பொறுப்புக்கு வரவிருக்கிறார் என்பதை உணர வேண்டும் என்றார். தாம் இதை வெளிப்படுத்தவில்லை என விளக்கமளித்துள்ள விக்டர் ஓர்பன், வெளிவரும் கருத்துக்கணிப்புகள் இதையே சுட்டிக்காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
நாம் நினைப்ப்து போன்று நடந்தால், அமெரிக்கா அமைதிக்கு ஆதரவாக மாறும், பின்னர் ஐரோப்பா போருக்கு ஆதரவாக இருக்க முடியாது என்றும் ஓர்பன் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய தலைவர்கள் வரும் வாரத்தில் புடாபெஸ்டில் சந்திக்கின்றனர், உக்ரைன் தொடர்பான விவாதம் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்கத் தேர்தல் முடிவு உக்ரைன் போரையும், ஐரோப்பா கண்டத்தின் பாதுகாப்பையும் எப்படிப் பாதிக்கும் என்பது குறித்து ஐரோப்பா நடுக்கத்தில் உள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |