பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அமெரிக்கா! ஒரு மாதத்தில் பணம் தீர்ந்துவிடும்..எச்சரிக்கும் கருவூல செயலர்
அமெரிக்காவில் ஒரு மாதத்தில் பண கையிருப்பு தீர்ந்து, செலவுகளை எதிர்கொள்ள இயலாத சூழல் ஏற்படும் என அந்நாட்டின் கருவூல செயலர் ஜேனட் யெல்லன் எச்சரித்துள்ளார்.
கருவூல செயலர் எச்சரிக்கை
அமெரிக்காவில் சனநாயக கட்சிகள் மற்றும் குடியரசு கட்சிகள் இடையே நீண்டகால மோதல் காணப்படுகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கடன் உச்சவரம்பை உயர்த்தவோ அல்லது இடைநிறுத்தவோ தவறினால், சூன் 1ஆம் திகதிக்குள் அமெரிக்காவில் பணம் தீர்ந்துவிடும் என கருவூல செயலர் ஜெனட் யெல்லன் எச்சரிக்கை செய்துள்ளார்.
கடன் உச்ச வரம்பை அடைவது என்பது அரசினால் மேலும் கடன் வாங்க முடியாது என்று அர்த்தமாகும். எனவே தான் 31.4 ட்ரில்லியன் டொலர் வரம்பை நிவர்த்தி செய்ய முடிந்த வரை செயல்படுமாறு யெல்லன் காங்கிரசை வலியுறுத்தினார்.
PTI
பணம் இல்லாமல் போகும் அபாயம்
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு யெல்லன் எழுதிய கடிதத்தில், 'கடந்த கால கடன் வரம்பு முட்டுக்கட்டைகளில் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம், கடைசி நிமிடம் வரை கடன் வரம்பை இடைநிறுத்துவது அல்லது அதிகரிப்பது வணிகத்திற்கும் நுகர்வோர் நம்பிக்கைக்கும் கடுமையான தீங்கை விளைவிக்கும், குறுகிய காலத்தை உயர்த்தும். வரி செலுத்துவோருக்கான கடன் செலவுகள் மற்றும் அமெரிக்காவின் கடன் மதிப்பீட்டை எதிர்மறையாக பாதிக்கும்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், 'அமெரிக்காவில் எப்போது பணம் இல்லாமல் போகும் என்பதை உறுதியாக அறிய முடியாது' என குறிப்பிட்டுள்ளார்.
Image: REUTERS/Dado Ruvic/Illustration/File Photo
காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகத்தின் அறிக்கை
இதேபோல் காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 'சூன் தொடக்கத்தில் கருவூலத்தில் நிதி இல்லாமல் போகும் அபாயம் உள்ளது. எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட தீர்ந்துபோகும் திகதி நிச்சயமற்றதாகவே உள்ளது. ஏனெனில் வரவிருக்கும் வாரங்களில் வருவாய் வசூல் மற்றும் செலவினங்களின் நேரம் மற்றும் அளவு ஆகியவற்றை கணிப்பது கடினம்' என கூறியுள்ளது.
இதற்கிடையில், மே 9ஆம் திகதி காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்திற்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
Image: Reuters