அதைப் பார்த்த பின் நான் அழ விரும்பினேன்! உக்ரைனை விட மோசமான நிலை - ரஷ்யாவின் நகர தலைவர் வேதனை
ரஷ்யாவின் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகள் மோசமான நிலையில் இருப்பதாக, டாடர்ஸ்தான் குடியரசின் தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.
ரஷ்ய துருப்புகள் உக்ரேனிய நகரங்களான லிசிசான்ஸ்க் மற்றும் ரூபிஷ்னேவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தபிறகு, மாவட்டத் தலைவர் Yevgeny Varakin அவற்றின் மறுகட்டமைப்பை மேற்பார்வையிட்டார்.
டாடர்ஸ்தானின் துணைப் பிரதமராகவும் பணியாற்றிய இவர் நேர்காணல் ஒன்றில், ரஷ்யாவின் கிராமப்புறங்களில் உள்ள பாடசாலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு உக்ரைனில் உள்ள பாடசாலைகளை விட மோசமான நிலையில் உள்ளன என்று கூறினார்.
அவர் கூறுகையில், "Verkhneuslonsky மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலையும் சுற்றிப் பார்த்த பிறகு நான் அழ விரும்பினேன். Lysychanskயில் உள்ள சில கிராமங்களில் பாடசாலைகள் சிறந்த நிலையில் இருப்பதாகத் தோன்றியது. நாங்கள் பார்பிக்யூவுக்கு வந்தபோது, எல்லா இடங்களிலும் குப்பைகளை விட்டுவிட்டு வீட்டிற்கு செல்லும் மாவட்டம் போல் உள்ளது" என்றார்.
மேலும் அவர், சுமார் 15,000 மக்கள் வசிக்கும் Verkhneuslonsky மாவட்டத்தில் மோசமான சாலை நிலைமைகள், தண்ணீர் பற்றாக்குறை, சிறு வணிக வளர்ச்சியின்மை மற்றும் லாபமற்ற பொது போக்குவரத்து ஆகியவற்றை விமர்சித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |