பிரித்தானியாவை போல் எங்களை சீண்டினால் இது தான் கதி! உலக நாடுகளுக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
பிரித்தானியான போர்க்கப்பல் போல் கடல்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து எங்களை சீண்டினால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த மாதம் Crimea அருகே உள்ள கருங்ககடலில் பிரித்தானியாவின் HMS Defender நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
Crimea-வை ரஷ்யா 2014-ல் உக்ரேனிலிருந்து பிரித்து தன்னுடன் இணைத்தது குறிப்பிடத்தக்கது.
அத்து மீறி நுழைந்த HMS Defender-ஐ ரஷ்ய போர்க்கப்பல் மற்றும் போர் விமானம் எச்சரிக்கும் விதமாக கப்பல் செல்லும் பாதையில் குண்டு போட்டு விரட்டியடித்தன.
பிரித்தானியா போர்க்கப்பலை மூழ்கடித்திருக்கலாம் என புதன்கிழமை ரஷ்ய ஜனாதிபதி புடின் கூறியது இரு நாடுகளுக்கு இடையேயான பதட்டத்தை மேலும் அதிகரித்து.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அரசு தொலைக்காட்சியில் பேசிய ரஷ்ய ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் Peskov, பிரித்தானியா போர்க்கப்பல் அத்துமீறி நுழைந்த சம்பவம் நன்கு திட்டமிடப்பட்ட சீண்டல், எந்தவொரு சீண்டலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய ஜனாதிபதி தனது கருத்து மூலம் தெளிவுப்படுத்தியுள்ளார்.
நிச்சியமாக பதிலடி மிகவும் கடினமாக இருக்கும் என்பது வெளிப்படையானது என்று Peskov கூறினார்.
மேலும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் சேர்ந்து இந்த சம்பவத்தை திட்டமிட்டன என்ற புடினின் குற்றச்சாட்டை Peskov எதிரொலித்தார்.