இனப்படுகொலை செய்த 41 உக்ரைன் அதிகாரிகள்..குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த ரஷ்யா
ரஷ்யாவின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம், கிழக்கு உக்ரைனில் 41 முன்னாள் மற்றும் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டான்பாஸ் இனப்படுகொலை
கிழக்கு உக்ரைனில் வசிக்கும் ரஷ்யர்களை துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்க, ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பிற்கு பிப்ரவரி 2022யில் உத்தரவிட்டதாகக் கூறினார். 
உக்ரைனின் டான்பாஸ் (Donbas) பகுதியில் ரஷ்ய இன மக்களை அழிக்க முயற்சிப்பதாக, கீவ்வில் உள்ள அதிகாரிகள் மீது புடின் தொடர்ந்து குற்றம்சாட்டியும் வருகிறார்.
இந்த நிலையில், டான்பாஸில் இனப்படுகொலை செய்ததாக ரஷ்ய வழக்கறிஞர்கள் டசின் கணக்கான உக்ரைன் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகின்றனர். 
41 முன்னாள் மற்றும் தற்போதைய அதிகாரிகள்
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய இன மக்களை இனப்படுகொலை செய்ததாக, 41 முன்னாள் மற்றும் தற்போதைய உக்ரைன் அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக, ரஷ்யாவின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் திங்களன்று அறிவித்துள்ளது. 
இந்தப் பட்டியலில் பெயரிடப்பட்ட அதிகாரிகளில் முன்னாள் உக்ரைன் ஜனாதிபதி பெட்ரோ பொரோஷென்கோ, பாதுகாப்பு அமைச்சர் டெனிஸ் ஷ்மிஹால், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் ஆகியோர் அடங்குவர்.
குற்றச்சாட்டின்படி, அந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 5,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 13,500 பேர் காயமடைந்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |