கருங்கடல் உணவு தானிய ஒப்பந்தம்: 60 நாட்கள் நீட்டிக்க ரஷ்யா சம்மதம்
உக்ரைன் உணவு தானியங்களை ஏற்றிச் செல்வதற்கான கருங்கடல் ஒப்பந்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.
கருங்கடல் ஒப்பந்தம்
உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடவடிக்கை தொடங்கி பிறகு, உக்ரைனில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உணவு தானியம் ஏற்றுமதி செய்யப்படாமல் தடுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை, உக்ரைன், ரஷ்யா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் உணவு தானியங்கள் கப்பல் மூலம் பிற உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
EPA
இந்த உணவு தானிய ஒப்பந்தம் ஒவ்வொரு முறையும் 120 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு வந்தது, அந்த வகையில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 120 நாள் ஒப்பந்தம் கடந்த சனிக்கிழமையுடன் காலாவதி ஆகிவிட்டது.
ஒப்பந்தம் நீட்டிப்பு
இந்நிலையில் ஒப்பந்தத்தை மேலும் நீட்டிப்பதற்காக ஐ.நா தனது தீவிர முயற்சியை மேற்கொண்டு வந்தது.
இதற்காக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ரஷ்ய அதிகாரிகளுடன் ஐ.நா பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Reuters
அதன் விளைவாக உணவு தானியங்கள் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் மேலும் 60 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எப்போதும் 120 நாட்கள் மேற்கொள்ளப்படும் நீட்டிப்பு ஒப்பந்தம் இந்த முறை 60 நாட்கள் மட்டுமே நீட்டிக்க முடியும் என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.