ஐரோப்பிய நாடுடன் இணைந்து..அணு ஆயுதப் பயிற்சியைத் தொடங்கிய ரஷ்யா
ரஷ்யாவும், பெலாரஸும் இணைந்து திங்களன்று கூட்டு இராணுவப் பயிற்சிகளைத் தொடங்கின.
கூட்டு இராணுவப் பயிற்சி
உக்ரைனுக்கு எதிரான சண்டையில் தொடர்ந்து வரும் ரஷ்யா கூட்டு இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பெலாரஸுடன் இணைந்து, தந்திரோபாய அணு ஆயுதங்களை போர்க்களத்தில் நிலைநிறுத்துவதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள திங்களன்று ரஷ்யா இந்தப் பயிற்சியைத் தொடங்கியுள்ளது.
தனது ஒரேஷ்னிக் அதிவேக பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்பை, பெலாரஸ் எல்லைக்குள் ரஷ்யா நிலைநிறுத்திய பிறகு நடைபெறும் முதல் பயிற்சிகள் இவையாகும்.

இதுகுறித்து பெலாரஸ் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், 'திட்டமிடப்படாத ஏவுதளங்களில் இருந்து அணு ஆயுதங்களை நகர்த்துவதற்கும், நிலைநிறுத்துவதற்கும் இராணுவத்தின் தயார்நிலையை சோதிப்பதே இந்தப் பயிற்சிகளின் நோக்கம்' என தெரிவித்துள்ளது.
நேட்டோ உறுப்பு நாடுகளிடம் இருந்து தனது நாட்டிற்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாக பெலாரஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுகாஷென்கோ கூறியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு இறுதியில் அணு ஆயுதங்களைத் தாங்கக் கூடிய ஒரேஷ்னிக் அமைப்பு பெலாரஸில் நிலைநிறுத்தப்பட்டது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |