103 போர்க் கைதிகள் பரிமாற்றம்: வெளியான தகவல்
Russia and Ukraine exchange 103 prisoners: உக்ரைனுடன் தலா 103 போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சமரசத்தைத் தொடர்ந்து ரஷ்யாவும், உக்ரைனும் தலா 103 போர்க் கைதிகளைப் பரிமாறிக் கொண்டன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
103 போர்க் கைதிகள்
அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் நடுவர் சமரச பேச்சுவார்த்தை மூலம் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளை விடுவித்துள்ளன.
அந்த வகையில், தற்போது 103 போர்க் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொண்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
அப்போது தனது உக்ரேனிய இணையான டிமிட்ரோ லுபினெட்ஸை சந்தித்ததாக ரஷ்யாவின் மனித உரிமைகள் ஆணையர் யானா லான்ட்ராடோவா தெரிவித்தார்.
உக்ரைன் உறுதிப்படுத்தவில்லை
பெலாரஸில் நடைபெற்ற லுபினெட்ஸ் உடனான சந்திப்பின் புகைப்படங்களையும், காணொளிகளையும் அவர் பகிர்ந்துகொண்டார்.
போரில் ஈடுபட்டுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளுக்கும் இடையே ஜூன் மாதத்திற்குப் பிறகு நடைபெறும் முதல் கைதிகள் பரிமாற்றம் இதுவாகும். ஆனால், உக்ரைன் இதனை உடனடியாக உறுதிப்படுத்தவில்லை.
அதே சமயம் ரஷ்ய இராணுவம், புதன்கிழமை விடுவிக்கப்பட்ட தங்கள் நாட்டு இராணுவ வீரர்கள் தற்போது பெலாரஸில் இருப்பதாகவும், அங்கு அவர்களுக்கு மருத்துவ மற்றும் மனநல பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |