போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் தாக்கிக்கொண்ட ரஷ்யா - உக்ரைன்: இருதரப்பிலும் உயிரிழப்பு
Strikes continued ukrainian and russian territory: மேற்கு ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது இருவர் கொல்லப்பட்டனர்.
ரஷ்யாவில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட, உக்ரைனில் ஒருவர் பலியானார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் அளவில் போர் நிறுத்தம்
தெற்கு உக்ரைனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒலேஷ்கி நகரில், இருதரப்பினரும் உள்ளூர் அளவில் போர் நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
ஆனால் ரஷ்யா மற்றும் உக்ரைனின் பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மேற்கு ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர் என ஆளுநர் யெகோர் கோவல்சுக் தெரிவித்தார்.
222 ட்ரோன்களை
அதேபோல் உக்ரைனில் கீவ் நகரின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டார். மாணவர் விடுதியில் இருந்தவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், ரஷ்யா மற்றும் ரஷ்யாவால் இணைக்கப்பட்ட கிரீமியா ஆகிய பகுதிகளில் உக்ரைனுக்கு சொந்தமான 222 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
