பிலிப்பைன்ஸில் உக்ரைன் அமைதிப்பேச்சுவார்த்தை: ரஷ்யா - அமெரிக்கா சந்திப்பு
ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பிலிப்பைன்ஸில் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
அமைதிப் பேச்சுவார்த்தை
பிலிப்பைன்ஸில் ASEAN உச்சி மாநாடு நடைபெற உள்ளது. உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து இங்கு விவாதிக்கப்பட உள்ளது.
உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இருவரும் சந்திக்க உள்ளனர்.
இதுகுறித்து பேசிய லாவ்ரோவ் கூறுகையில், "இந்த சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நேற்று நடைபெற வரவேற்பு நிகழ்ச்சியில் மார்கோ ரூபியோவை நாங்கள் சுருக்கமாக சந்தித்தோம். அப்போது நாளை முற்பகல் வேளையில் இச்சந்திப்பு நடைபெறும் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டோம்" என்கிறார்.
அதேபோல், லாவ்ரோவுடனான சந்திப்பை உறுதிப்படுத்திய ரூபியோ, உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சாத்தியமான வழிகள் மீதே தனது முக்கிய கவனம் இருக்கும் என்று கூறினார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |