உக்ரைன் போரில் 30,000 வீரர்கள் இழப்பு...வீழ்ச்சியை தரும்:இரகசிய பிரித்தானிய அறிக்கை தகவல்!
உக்ரைன் மீதான போர் நடவடிக்கையில் ரஷ்யா இதுவரை 30,000 வீரர்கள் வரை இழந்து இருக்கும் நிலையில், இந்த இழப்பினை ரஷ்ய ஜனாதிபதி புடின் உக்ரைன் வெற்றிக்கு வழங்க வேண்டிய விலை தான் என கருத்துவதாக இரகசிய பிரித்தானிய அறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை நான்காவது மாதத்தை அடைந்து இருக்கும் நிலையில், ரஷ்யா தனது 30,000 துருப்புகளை இழந்து இருப்பது ரஷ்ய ராணுவத்தை வீழ்ச்சியடைய வைக்ககூடும் என திங்களன்று வெளிவந்த இரகசிய பிரித்தானிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் இந்த இழப்பானது ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டாலும், அதனை உக்ரைன் வெற்றிக்கு செலுத்த வேண்டிய விலை என்று அவர் நம்புவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வெளிவந்த தி மிரர் செய்தி நிறுவனத்தின் புதிய அறிக்கையில், ரஷ்ய அதிகாரிகள் புடினின் படையெடுப்பை பேரழிவு என நம்ப வைக்க முயற்சித்து தோல்வியடைந்துள்ளனர் என்றும், உக்ரைனின் கிழக்கு டான்பாஸ் பகுதியில் இன்னம் ஓரளவு கூடுதல் வெற்றிகளை பெற முடியும் என புடின் நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பிராந்தியங்களில் வெற்றி பெற்றால், ரஷ்யாவுக்கு கீவ் மீதான செல்வாக்கு கிடைக்கும் என தி மிரரின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனின் முக்கிய நகருக்குள் நுழைந்தது ரஷ்ய ராணுவம்! 2 பேர் உயிரிழப்பு
அத்துடன் டான்பாஸில் விரைவான மற்றும் தீர்க்கமான வெற்றியை அடைய ரஷ்யாவின் முயற்சி இன்னும் வெற்றிபெறவில்லை.
அவர்களின் முன்னோக்கி நகரும் வேகம் இன்னும் நாள் ஒன்றுக்கு 1-2 கிமீ என்ற விகிதத்தில் தான் இருப்பதாக தெரிவித்துள்ளது.