ஐரோப்பிய நாட்டிலிருந்து ஏவுகணை மூலம் உக்ரைன் விமான நிலையத்தை தாக்கி அழித்த ரஷ்யா! வெளியான பரபரப்பு வீடியோ
ஐரோப்பிய நாடான பெலாரஸிலிருந்து ஏவுகணை மூலம் உக்ரைன் விமான நிலையத்தை ரஷ்யா தாக்கி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நேற்று, பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko உடன் உக்ரைன் நடத்திய உரையாடலைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், அதில், உக்ரேனிய பிரதிநிதிகள் குழு, ரஷ்ய பிரதிநிதிகள் குழுவை முன்நிபந்தனையின்றி உக்ரேனிய-பெலாரஷ்யன் எல்லையில், பிரிபியாட் ஆற்றுக்கு அருகில் சந்திப்பதாக நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
உக்ரேனிய பிரதிநிதிகள் குழுவின் பயணம், பேச்சுவார்த்தைகள் மற்றும் நாடு திரும்பும் போது, பெலாரஸில் நிறுத்தப்பட்டுள்ள அனைத்து விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ஏவுகணைகள் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடாது என்பதை உறுதி செய்யும் பொறுப்பை பெலாரஸ் ஜனாதிபதி Alexander Lukashenko ஏற்றுக்கொண்டார் என ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, நேற்று மாலை பெலாரஸிலிருந்து உக்ரைனின் Zhytomyr விமான நிலையம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
⚡️Missile from Belarusian territory fired at Zhytomyr airport, Center for Strategic Communications and Information Security reported.
— The Kyiv Independent (@KyivIndependent) February 27, 2022
The strike occurred a few hours after Ukraine confirmed peace talks with Russia on the Ukrainian-Belarusian border.
Video: SPRAVDI/Telegram pic.twitter.com/wAxh6ntHeO
ஏவுகணை தாக்குதல், விமான நிலையம் உட்பட அதை சுற்றியுள்ள பகுதிகளில் உலுக்கிய காட்சி வெளியாகியுள்ளது.
Video of a Russian missile strike on the Zhytomyr airport, presumably by an Iskander-M missile. https://t.co/ifx03UyYW4 pic.twitter.com/j8c3Ql2FKx
— Rob Lee (@RALee85) February 27, 2022
ரஷ்ய பாலிஸ்டிக் ஏவுகணை லாஞ்சர்கள் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.