ரஷ்யாவின் திடீர் தாக்குதலால் சிதைந்த கட்டிடங்கள்: உக்ரைன் பெண் வெளியிட்ட பதற வைக்கும் வீடியோ
ரஷ்யா நடத்திய திடீர் வான்வெளி தாக்குதலில் சிதைந்து போன வீட்டிலிருந்து, பெண் கதறலுடன் வெளியிட்ட வீடியோ அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திடீர் ராணுவ தாக்குதல்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடைபெற்ற போரில் நேற்று நள்ளிரவில் ரஷ்யா திடீர் ராணுவ தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் தலைநகரான கிய்வில் 20க்கும் மேற்பட்ட அணு ஏவுகணை மற்றும் இரண்டு ட்ரோன்கள் நடத்திய தாக்குதலில், கட்டிடம் சேதமடைந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
@ap
இந்த தாக்குதலில் இரண்டு வயது குழந்தை மற்றும் 75 வயது முதியவர் உட்பட 9 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென நடைபெற்ற தாக்குதலால், கிய்வ் நகரின் சாலைகள் மற்றும் மின் இணைப்பு போன்றவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
வான்வெளி தாக்குதல்
கிய்விற்கு 30மைல் தொலைவிலுள்ள உமன் நகரில், இரண்டு ஏவுகணை தாக்கியதில் 9 அடுக்கு மாடிக் கட்டிடம் சிதைந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கிய மூன்று குழந்தைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
@ap
இந்த விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் சிதைந்து போன தங்களுடைய வீட்டை காட்டி கதறி அழுகும் வீடியோ அனைவரையும் பதற வைக்கிறது.
வீடியோவை காண
“ஏவுகணை எங்கள் வீட்டை தாக்கியது, எங்களை சுற்றி ஒரே ரத்த வெள்ளமாக இருக்கிறது. எங்களுக்கு எப்படியாவது உதவுங்கள்” என பெண் கதறி அழும் வீடியோவை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@ap
இந்த திடீர் தாக்குதலால் பாரிய இழப்புகள் ஏற்பட்டு இருப்பதாகவும், மேலும் கூடுதல் தகவல்கள் அறிவிக்கப்படும் என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.