உக்ரைனில் பயணிகள் பேருந்து மீது ரஷ்யா குண்டு வீச்சு தாக்குதல்: 33 பேர் பலி
russia Attacks Kramatorsk Bus 33 dead: உக்ரைனின் கிரமடோர்க் நகரில் பேருந்து மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர்.
பேருந்து மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கிரமடோர்க் நகரில் பேருந்து மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக உக்ரைனின் உள்ளூர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் மேலும் 18 பேர் வரை படுகாயமடைந்து இருப்பதாக பிராந்தியத்தின் ஆளுநர் வாடிம் பிலாஷ்கின் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வெளியான காட்சிகளில், பேருந்தின் எரிந்த பாகங்கள் சிதறி கிடப்பதும், குண்டு சிதறல்களுக்கு இடையில் உடல்கள் கிடப்பதும் பார்க்க முடிகிறது.

பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்துகளை குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலுக்கு பிராந்திய ஆளுநர் பிலாஷ்கின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்துவதை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வந்தாலும், உக்ரைனிய நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர் வான்வழித் தாக்குதலை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.