ரஷ்யா-பெலாரஸ் இணைந்த Zapad-2025 ராணுவ பயிற்சி தொடக்கம்: அதிகரிக்கும் பிராந்திய பதற்றம்
ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகள் இணைந்து Zapad - 2025 ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளது.
Zapad - 2025 ராணுவ பயிற்சி
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ள தகவலில், ரஷ்யாவும் பெலாரஸும் இணைந்து Zapad - 2025 அதிகாரப்பூர்வமாக தொடங்கி இருப்பதாக அறிவித்துள்ளது.
இரு நாடுகள் இணைந்து நடத்தும் இந்த கூட்டு ராணுவ முயற்சி ராணுவ தளங்கள் மற்றும் பால்டிக், பேரன்ட்ஸ் கடல் பரப்புகளிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளின் பங்களிப்பு
இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு(SEO), கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (CSTO) மற்றும் பிற நட்பு நாடுகளின் இராணுவ படைகளும் பங்கேற்கின்றன.
இந்த பயிற்சியின் முக்கிய நோக்கம், நட்பு நாடுகளின் படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, திறமை மேம்பாடு மற்றும் பிராந்திய ஒற்றுமையை வலுபடுத்துதல் ஆகியவை என்று ரஷ்ய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய டிரோன்கள் போலந்து மற்றும் நேட்டோ படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு இந்த கூட்டு ராணுவ பயிற்சி தொடர்பான அறிவிப்பு வெளிவந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |