பள்ளி வளாகத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய கொடூர தாக்குதல்: 60 பேர் இடிபாடுகளில் சிக்கி தவிப்பு!
உக்ரைனின் பிலோஹோரிவ்கா கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 2 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.
ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதியில் திசை திரும்பி இருக்கும் நிலையில், சனிக்கிழமை மதியம் பிலோஹோரிவ்கா கிராமத்தில் உள்ள பள்ளி வளாகத்தின் மீது ரஷ்ய ராணுவம் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், இதுவரை இரண்டு நபர்கள் வரை கொல்லப்பட்டதுடன் 60 மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.
60 people are estimated to have been killed by the Russian airstrike on a school in Bilohorivka (Luhansk Obl) on 7 May
— Euromaidan Press (@EuromaidanPress) May 8, 2022
Firefighters had worked to extinguish the resulting fire for 4 hours. 30 ppl were evacuated from the rubble - Luhansk RegHead Haidai
?https://t.co/3Df1SCo18d pic.twitter.com/GNL7dd3J2U
இந்த நிலையில், பள்ளி வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து பேசியுள்ள லுஹான்ஸ்க் (Luhansk) கவர்னர் செர்ஹி கைடாய், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலுக்கு பயந்து பள்ளி வளாகத்தில் 90 பேர் வரை தங்கி இருந்தாகவும், இந்த தாக்குதலினால் தற்போது அதில் 2 பேர் வரை கொல்லப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதலால் ஏற்பட்ட இடிபாடுகளில் 30 பேர் வரை மீட்கபட்டு இருப்பதாகவும், மேலும் 60 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடி வருவதாகவும் கவர்னர் செர்ஹி கைடாய் அவரது டெலிக்ராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: வடக்கு அயர்லாந்து தேர்தல்: வரலாற்று வெற்றியை பதிவு செய்தது Sinn Féin கட்சி.
கவர்னர் செர்ஹி கைடாய் மற்றொரு தகவலில், Shypilovo கிராமத்தில் ரஷ்ய ராணுவம் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்களின் வீடுகள் நொருக்கப்பட்டு அதன் இடிபாடுகளில் 11 நபர்கள் வரை சிக்கி தவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.