அமெரிக்காவுடன் சுமூகமான உறவுக்கு ரஷ்யா விருப்பம்: ஆர்க்டிக் குறித்து விவாதிக்க அழைப்பு
ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பரஸ்பர ஒத்துழைப்புக்கு அழைப்பு
ஆர்க்டிக் பிராந்தியம் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செயல்படவும், பரஸ்பரம் இணைந்து செயல்படுவதற்கான ஒத்துழைப்பை வழங்கவும் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இந்த கருத்தை சனிக்கிழமையன்று நார்வே நாட்டிற்கான ரஷ்ய தூதர் நிக்கோலாய் கோர்ச்சூனோவ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக Ria Novosti செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இருதரப்பு உறவுகள் மீண்டும் புத்துயிர் அடைய வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அனைத்து நாடுகளும் இணையான பேச்சுவார்த்தை நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைப்பது தொடர்பான டிரம்பின் கருத்து குறித்தும், டிரம்ப் நிர்வாகத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு விவகாரம் குறித்தும் கோர்ச்சூனோவ் பேசியுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ஆர்க்டிக் பிராந்தியத்தை கைப்பற்றுவது தொடர்பாக விவாதித்து வரும் நிலையில், ஆர்க்டிக் பிராந்தியம் மீதான நிலைத்தன்மை மற்றும் இறையாண்மை மீது ரஷ்யா கவனம் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |