இரண்டு புதிய கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா: உக்ரைனிடம் இருந்து கைநழுவுகிறதா Donetsk?
உக்ரைனுடனான போரில் புதிதாக இரண்டு கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிதாக 2 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்யா
உக்ரைன்-ரஷ்யா போரானது பல்வேறு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகும், எந்தவொரு நிரந்தர முடிவும் எட்டப்படாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இரு நாட்டு படைகளும் டொனெட்ஸ்க் பிராந்தியத்தை கட்டுப்பாட்டில் எடுக்கும் முயற்சியில் தீவிரமாக சண்டையிட்டு வருகின்ற்னார்.
இந்நிலையில் டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் கிளெபான்-பைக் மற்றும் செரெட்னே ஆகிய இரண்டு புதிய குடியிருப்பு கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களில் காடரினிவ்கா, ருசின் யார் மற்றும் பெயரிடப்படாத மற்றொரு கிராமம் உட்பட 5 குடியிருப்பு கிராமங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருப்பதாக அறிவித்துள்ளது.

3000 கி.மீ தூர இலக்கை தாக்கும் புதிய ஏவுகணை: உக்ரைன் கையில் கிடைத்த பயங்கர ஆயுதம்! நடுக்கத்தில் ரஷ்யா
பதிலளிக்காத உக்ரைன்
ரஷ்யாவின் இந்த உரிமைகோரல்களை உக்ரைன் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
அதே சமயம் உக்ரைன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஸெலெனி ஹாய் கிராமத்தில் மீண்டும் கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் ரஷ்ய படைகளின் முன்னேற்றங்களை தடுக்கும் முயற்சியில் தற்போது உக்ரைனிய படைகள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |