ரஷ்யாவும் சீனாவும் மனித இனத்தை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும்: நிபுணர் கருத்து
சமீபத்தில் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் போர் ஒத்திகை நடத்திய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏதேனும் அசம்பாவிதம் நிகழுமானால், அதை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க மற்றும் கனேடிய போர் விமானங்கள் பரபரப்பாக புறப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
அச்சுறுத்தலா?
MOD/east2west news
ஆனால், சமீபத்தில் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் ஒத்திகையால் அச்சுறுத்தல் எதும் இல்லை என அமெரிக்கத் தரப்பு தெரிவித்துள்ளது.
என்றாலும், ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையான Bering கடல் பரப்பில் குண்டு வீசும் திறன்கொண்ட போர் விமானங்களைக் கொண்டு போர் ஒத்திகை நடத்தியது, முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்கிறார் பக்கிங்காம் பல்கலை அரசியல் துறை பேராசிரியரான Anthony Glees.
நாஸி ஜேர்மனியும் ஏகாதிபத்திய ஜப்பானும் இரண்டாம் உலகப்போரில் கைகோர்த்தன. அதேபோன்றதொரு உறவை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கியுள்ளன. ஆக, அவர்கள் உலகை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |