வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்த ரஷ்ய சீன விமானங்கள்: போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியா
ரஷ்யா மற்றும் சீனாவுக்கு சொந்தமான ராணுவ விமானங்கள் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, அப்பகுதிக்கு தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது தென்கொரியா.
வான் பாதுகாப்பு மண்டலம்
இந்த வான் பாதுகாப்பு மண்டலம் என்பது, முழுமையாக ஒரு நாட்டுக்குச் சொந்தமான வான்வெளி அல்ல. அது, பொதுவாக பாதுகாப்புக்காக ஒரு நாடு தனது போர் விமானங்களை ரோந்து செல்ல அனுப்பும் பகுதி ஆகும்.

ஆகவே, அந்த பகுதிக்குள் வேறு நாட்டு விமானங்கள் நுழைவது அந்த நாட்டின் வான்வெளிக்குள் நுழைவதாக கருதப்படாது.
போர் விமானங்களை அனுப்பிய தென்கொரியா
இந்நிலையில், தென்கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்துக்குள் இன்று காலை 10.00 மணியளவில் ஏழு ரஷ்ய ராணுவ விமானங்களும், இரண்டு சீன ராணுவ விமானங்களும் நுழைந்துள்ளன.
[
]
உடனடியாக தென்கொரியா தனது போர் விமானங்கள் இரண்டை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
ரஷ்ய மற்றும் சீன விமானங்கள் தனது வான்வெளிக்குள் நுழையவில்லை என்றாலும், ஏதாவது எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிட்டால் அதை எதிர்கொள்வதற்காகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது போர் விமானங்களை அனுப்பியதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பாதுகாப்பு மண்டலத்துக்குள் பறந்த ரஷ்ய மற்றும் சீன விமானங்கள், ஒரு மணி நேரம் அப்பகுதியில் பறந்தபின் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகவும் தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
2019ஆம் ஆண்டிலிருந்தே, ரஷ்யாவும் சீனாவும் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்வதாகக் கூறி, இப்படி முன்னறிவிப்பின்றி தென்கொரியா தனது பாதுகாப்பு மண்டலமாக கருதும் பகுதிக்குள் தங்கள் விமானங்களை அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |