இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
அமெரிக்காவுடனான உறவுகள் மிகவும் மோசமடைந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ரஷ்யா, நாட்டுமக்கள் அமெரிக்கா, கனடாவுக்கு பயணப்பட வேண்டாம் என திடீர் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஐரோப்பிய நாடுகளுக்கும்
அமெரிக்கா, கனடா மட்டுமின்றி, சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணப்பட வேண்டாம் என்றும், அமெரிக்க அதிகாரிகளால் ரஷ்ய மக்கள் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரித்துள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மரியா ஜகரோவா (Maria Zakharova) தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான உறவுகள் முறிவின் விளிம்பில் தத்தளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இது முற்றிலும் அமெரிக்க நிர்வாகத்தின் தவறு என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான சூழலில் ரஷ்ய மக்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது உத்தியோகப்பூர்வமாகவோ அமெரிக்காவுக்கு பயணபப்டுவது என்பது ஆபத்தை வரவழைக்கும் செயல் என்றார்.
அமெரிக்கா மட்டுமின்றி, அதன் நெருக்கமான நட்பு நாடுகளான கனடா மற்றும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்ய மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்துவதாக ஜகரோவா குறிப்பிட்டுள்ளார்.
உறவு நெருக்கடி நிலை
உக்ரைன் போரினால் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, 1962ல் கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எந்த நேரத்திலும் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது என ரஷ்யா மற்றும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷ்யப் பிரதேசத்தைத் தாக்க உக்ரைனுக்கு அனுமதி அளித்துள்ளதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு நெருக்கடி நிலையை எட்டியது.
அத்துடன், அணு ஆயுத பயன்பாடு தொடர்பிலான முடிவுகளில் ரஷ்யா திருத்தமும் கொண்டுவந்தது. மேலும், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகலின் பேரில் இரு நாடுகளும் தங்கள் குடிமக்களை கைது செய்து வருவதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |