ஒரேநாளில் இரவில்...ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்: 500 ராணுவ வீரர்கள் பலி!
- உக்ரைனில் ஒரேநாள் இரவில் 87 ராணுவ இலக்குகளில் ரஷ்யா தாக்குதல்.
- 500 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக ரஷ்ய செய்தி ஊடகமான TASS தகவல்.
-
போர் தொடங்கியதில் இருந்து இதுவரை 15,000 வீரர்களை ரஷ்யா இழந்துள்ளதாக பிரித்தானிய உளவுத்துறை அறிக்கை.
உக்ரைனில் ஒரே நாளில் நடத்திய 87 வான்வழி தாக்குதலில் 500 உக்ரைனிய அதிகாரிகள் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி ஊடகமான TASS தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கைகள் முன்றாவது வாரத்தை தொட்டு இருக்கும் நிலையில், போர் தீவிரங்கள் தணிவதற்கான அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ரஷ்ய ராணுவ நடவடிக்கை தொங்கி முன்று மாதத்தில் முதல்முறையாக உக்ரைன் தலைநகர் கீவ்-விற்கு வந்த அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் உக்ரைனின் ராணுவத்தை பலபடுத்துவதற்காக கிட்டதட்ட 750 மில்லியன் டொலர் நிதியை வழங்க இருப்பதாக உறுதியளித்தனர்.
அமெரிக்க அதிகாரிகளின் வருகை தொடர்ந்து அதனை கண்டிக்கும் விதமாக ரஷ்ய ராணுவம் ஒரேநாள் இரவில் 87 உக்ரைன் ராணுவ இலக்குகளில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த வான்வழி தாக்குதலில் குறைந்தது 500 உக்ரைனிய அதிகாரிகள் வரை கொல்லப்பட்டு இருப்பதாக ரஷ்ய செய்தி ஊடகமான TASS தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இரும்பு ஆலையில் ஷெல் தாக்குதல்: அதிகப்படியான கரும்புகையால் மக்கள் பீதி!
நேற்று பிரித்தானிய உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், மோதலில் தொடக்கதில் இருந்து இதுவரை ரஷ்ய ராணுவம் எறக்குறைய 15,000 வீரர்களை இழந்து இருப்பதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.