சொந்த மக்களை கொன்று குவித்த உக்ரைன் ராணுவம்? ரஷ்ய பரபரப்பு தகவல்
உக்ரைன் அதன் சொந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Donbass பகுதியில் உள்ள Kramatorsk ரயில் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே புச்சா நகரில் பொதுமக்களை படுகொலை செய்து ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், Kramatorsk ரயில் நிலைய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புடின் மகள்களை குறிவைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! கசிந்த முக்கிய தகவல்
இந்நிலையில், Kramatorsk ரயில் நிலைய தாக்குதலுக்கு பொறுப்பேற்க மறுத்த ரஷ்யா, இது உக்ரைன் அதன் சொந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் என தெரிவித்துள்ளது.
Kramatorsk ரயில் நிலைய தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் உக்ரேனிய ராணுவத்தால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் என ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், Kramatorsk-ல் தாக்குதல் நடத்த ரஷ்ய ராணுவத்திற்கு எந்தவித உத்தரவும் பிறப்பிக்கவில்லை என தெரிவித்துள்ளது.