கருங்கடல் கரையில் எண்ணெய் கசிவால் ஏற்பட்ட பேரழிவு., ரஷ்யாவின் துரித நடவடிக்கைகள்
ரஷ்யாவின் கருங்கடல் கடற்கரை பகுதியில் ஏற்பட்ட பெரும் எண்ணெய் கசிவை சரி செய்வதில் உள்ளூர் தன்னார்வலர்கள் மற்றும் அதிகாரிகள் களமிறங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிகழ்வை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு சூழலியல் பேரழிவு என வர்ணித்துள்ளார்.
வார இறுதியில் ஏற்பட்ட மழைக் காற்றின் காரணமாக, கெர்ச் நீரிணையில் செயல்பட்ட இரண்டு பழைய எண்ணெய் கப்பல்களில் ஒன்று வெடித்து இரண்டு பாகமாக பிரிந்தது. இதனால் ஒரு கப்பல் குழும உறுப்பினர் உயிரிழந்தார்.
மற்றொரு கப்பல் கரையோடு மோதி நிலைகுலைந்தது. இந்த விபத்தில் இரு கப்பல்களும் கொண்டிருந்த 9,200 மெட்ரிக் டன் எண்ணெயில் 40 சதவிகிதம் கடலில் கசிந்துள்ளது.
இந்நிலையில், தன்னார்வலர்கள் மற்றும் மீட்புக்குழுக்கள் கடற்கரையில் கசிந்துள்ள கறுப்பு தார் போன்ற எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 3,300 டன் அசுத்தமான மணல் மற்றும் மண்ணை சேகரித்துள்ளதாக ரஷ்ய அவசர உதவி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கசிந்துள்ள எண்ணெயால் பாதிக்கப்பட்ட 500 பறவைகளை மீட்கும் பணியில் உள்ளனர், ஆனால் 30 பறவைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பறவைகளின் இறக்கைகளிலிருந்து எண்ணெயை சுத்தம் செய்வதோடு, அவற்றுக்கு ஊட்டச்சத்து வழங்கவும் நிபுணர்கள் முயற்சிக்கின்றனர்.
இந்த எண்ணெய் கசிவால் 45 ஹெக்டேர் பரப்பளவிலான பாதுகாக்கப்பட்ட இயற்கை வளப்பகுதி மற்றும் அனாபா போன்ற சுற்றுலா இடங்கள் மாசடைந்துள்ளன. பல்வேறு உயிரினங்கள், குறிப்பாக டால்பின்கள், இந்த பேரழிவின் பாதிப்பில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia oil spill Black Sea coast