ரஷ்யாவின் நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் மூடல்...எரிவாயு வழங்கலில் சிக்கல்!
ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே நார்ட் ஸ்ட்ரீம் 1 எரிவாயு குழாய் மூடல்.
ஜெர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயுவில் சிக்கல்.
ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே எரிவாயு கொண்டு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாய் மூடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போரை கண்டித்து ஐரோப்பிய நாடுகள், கனடா, அமெரிக்கா, பிரித்தானியா ஆகியவை ரஷ்ய கூட்டமைப்பிற்கு எதிராக பல அடுக்கு பொருளாதாரத் தடைகளை விதித்தன.
இதனை எதிர்க்கும் விதமாக ரஷ்யாவும், பொருளாதார தடைகளை விதித்த நாடுகளுக்கு வழங்கி வந்த எரிவாயு அளவினை பெருமளவு குறைந்தது.
இவை ஐரோப்பிய நாடுகளில் மோசமான எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவிற்கும், ஐரோப்பிய நாடுகளும் இடையே எரிவாயு கொண்டு செல்லும் நார்ட் ஸ்ட்ரீம்1 குழாயை ரஷ்யா மூடியுள்ளது.
இதுத் தொடர்பாக ரஷ்யாவின் அரசு எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம் தெரிவித்துள்ள தகவலில், நார்ட் ஸ்ட்ரீம் 1 ஸ்டேஷன் பராமரிப்பு பணியில் இருப்பதாக தெரிவித்துள்ளது.
மூடப்பட்ட இந்த நார்ட் ஸ்ட்ரீம் 1 குழாயினால், ஜெர்மனிக்கு வழங்கப்படும் எரிவாயு வழங்கப்படாது என தெரிய வந்துள்ளது.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு: விண்வெளியில் அரிசியை விளைய செய்து சாதனை: சீனாவிற்கு குவியும் பாராட்டுகள்!
சப்ளை மறுதொடக்கம் செய்யப்படுவதற்கு ரஷ்யா உத்தரவாதம் அளிக்குமா என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ்விடம் கேட்டபோது, தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர, விநியோகங்களுக்கு எதுவும் தடையாக இல்லை என்பதற்கு உத்தரவாதங்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.