ஈரானின் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ரஷ்யா கண்டனம்
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ரஷ்யா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ரஷ்யா கண்டனம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் இணைந்து ஈரான் நாட்டின் நடான்ஸ்(Natanz) அணுசக்தி மையத்தின் தாக்குதலை முன்னெடுத்துள்ளனர்.
இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சனிக்கிழமை அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் இந்த தாக்குதலுக்கு ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.
அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மரியான் சகரோவா வெளியிட்ட அறிக்கையில், ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி ஒப்பந்தங்களை மீறும் திமிரான செயல் என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன் ஈரானின் இந்த அணுமின் நிலையம் சர்வதேச அணுசக்தி முகமையின் நேரடி கட்டுப்பாட்டில் அமைச்சர் மரியான் சகரோவா சுட்டிக்காட்டியதோடு இந்த தாக்குதல் சர்வதேச கண்காணிப்பு முயற்சிகளுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவால் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலகளாவிய அணுசக்தி பாதுகாப்பு மற்றும் இறையான்மையை பாதிக்கும் பொறுப்பற்ற செயல் என்று விமர்சித்துள்ளார்.
ஐ.நா தலையீட்டு எந்தவொரு பாரபட்சமும் இல்லாமல் உறுதியான மதிப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |