சர்ச்சைக்குள்ளான ரஷ்ய விண்வெளி வீரர்களின் உடை: வெளிவந்துள்ள புதிய விளக்கம்!
ரஷ்ய விண்வெளி வீரர்களின் உடை குறித்து பெரும் சர்ச்சை எழுந்த நிலையில், அந்த உடைகள் 6 மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது என்றும், அவை உக்ரைன் தேசியக்கொடியை பிரதிபலிக்கவில்லை எனவும் ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் ஆர்டெமியேவ் தெரிவித்துள்ளார்.
கஜகஸ்தானில் இருந்து ஏவப்பட்ட சோயுஸ் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ரஷ்யாவை சேர்ந்த தளபதி ஒலெக் ஆர்டெமியேவ், டெனிஸ் மத்வீவ் மற்றும் செர்ஜி கோர்சகோவ் ஆகியோர் சென்று உள்ளனர்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வந்துள்ள மூன்றுபேர்களையும் வரவேற்ற புகைப்படத்தில் அந்த வீரர்கள் உக்ரைனின் தேசிய கொடியை பிரதிபலிக்கும் மஞ்சள் மற்றும் நீல நிற வண்ணங்களை கொண்ட உடைகளை அணிந்து இருந்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், அந்த உடைகள் ஆறு மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்டது என்றும், அவை உக்ரைன் தேசிய கொடியை பிரதிபலிக்கும் எந்தவொரு மறைமுகமான குறியீடுகளை உள்ளடக்கியது இல்லை என ரஷ்ய விண்வெளி வீரர் ஒலெக் ஆர்டெமியேவ் ரஷ்யாவின் விண்வெளி நிலையத்திற்கு சொந்தமான டெலிக்ராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் மூவரும் பாமன் மாஸ்கோ மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என்பதால் அவற்றை பெருமைபடுத்தும் வகையில் அந்த பல்கலைக்கழத்தை பிரதிபலிக்கும் விதமாக மஞ்சள் மற்றும் நீல நிறங்களை தேர்வு செய்ததாக தெரிவித்துள்ளார்.
வண்ணங்கள் வெறும் வண்ணங்களே, விண்வெளி வீரர்களின் உடைகளில் உள்ள மஞ்சள் மற்றும் நீலநிறங்கள் மஞ்சள் சூரியனையும் நீலவனையும் அங்கீகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.
Иногда желтый цвет означает просто желтый цвет. Если бандеровские выродки думают, что мы из-за них поменяем наши цветовые вкусы, перекрасим стартовый комплекс Восточного в серо-буро-малиновый, герб МГТУ Баумана в оранжевый (нет, оранжевый тоже не подходит),.. pic.twitter.com/7qFDtu11Dl
— РОГОЗИН (@Rogozin) March 19, 2022
போர் நடைபெற்று வரும் இந்த நாள்களில், நாங்கள் விண்வெளியில் இருந்தாலும், எங்கள் நாட்டுடனும், எங்கள் ஜனாதிபதி மற்றும் மக்களுடன் இணைத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ரஷ்யாவின் விண்வெளி மையத்தின் தலைவரான டிமிட்ரி ரோகோசின், ரஷ்ய விண்வெளி வீரர் கோர்சகோவ் கருத்தை குறிப்பிட்டு, மாஸ்கோ பல்கலைக்கழத்தின் எம்ப்ளேம்(emblem) ஆகியவற்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இளம்பெண் மீது பாய்ந்த அமெரிக்காவின் பொருளாதார தடை: நியாயமற்றது என பெஸ்கோவ் கண்டனம்!