ஒரே இரவில் உக்ரைனின் 77 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
உக்ரைனின் 77 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைனின் எல்லையான மேற்கு பிரையன்ஸ்க் பகுதியில் 30 ட்ரோன்களை இடைமறித்ததாகவும், கலுகா பகுதியில் 25 ட்ரோன்களையும் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய அமைச்சகம் கூறியுள்ளது.
மேலும் குர்ஸ்க், வோரோனேஜ், ரோஸ்டோவ் மற்றும் பெல்கோரோட் பகுதியில் கூடுதல் ட்ரோன்கள் என மொத்தம் 77 ட்ரோன்களை ஒரே இரவில் வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
கெர்சனில் ஒருவர் பலி
முன்னதாக, மாஸ்கோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 90க்கும் மேற்பட்ட ட்ரோன்களை செவ்வாயன்று வீழ்த்தியதாக கூறப்பட்டது.
இதற்கிடையில், பல உக்ரேனிய நகரங்கள் தாக்குதலுக்கு உள்ளதாகவும், அதில் கெர்சனில் 42 வயது பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகவும் பிராந்திய நிர்வாக தலைவர் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |