உக்ரைனை தாக்கியது மூன்று அதிபயங்கர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்: அமைச்சர் செர்ஜி ஷோய்கு தகவல்
ரஷ்யாவின் கின்சல் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூன்று முறை உக்ரைன் மீது ஏவப்பட்டுள்ளது.
கின்சல் ஏவுகணைகளை பறக்கும் போது வீழ்த்துவது சாத்தியமற்றது.
உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் சிறப்பு இராணுவ நடவடிக்கையில் ரஷ்யா மூன்று முறை தனது ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இருப்பதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை 175 நாட்களை கடந்து, தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Reuters
இந்தநிலையில் உக்ரைனில் நடத்தப்பட்டு வரும் போர் தாக்குதலில் ரஷ்யா முன்று முறை ஹைப்பர்சோனிக் கின்சல் hypersonic Kinzhal (Dagger) ஏவுகணைகளை பயன்படுத்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஹைப்பர்சோனிக் ஆயுதங்களின் ஒற்றை பகுதியாக கின்சல் ஏவுகணைகளை நாட்டிற்கு வழங்கினார்.
இந்த கின்சல் ஏவுகணைகள் உலகின் எந்த புள்ளியையும் தாக்கும் சக்தி கொண்டது மற்றும் அமெரிக்காவின் ஏவுகணை தடுப்புகளையும் உடைத்து முன்னேறும் ஆற்றல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
AP
இதுத் தொடர்பாக ரஷ்யாவின் அரசு தொலைக்காட்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, கின்சல் ஏவுகணைகள் உக்ரைனில் மூன்று முறை அதிக மதிப்புள்ள இலக்குகளை தாக்கி அதன் திறமையை நிறுபித்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: தப்பிய குறி... உடல் சிதறி பலியான புடினுக்கு நெருக்கமானவரின் மகள்: உக்ரைன் மீது சந்தேகம்
மேலும் கின்சல் ஏவுகணைகளை பறக்கும் போது வீழ்த்துவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.