இராணுவ சேவையில் இணைந்த ரஷ்யாவின் Oreshnik ஏவுகணை-பெலாரஸில் நிலைநிறுத்த புடின் உத்தரவு
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் புதிய ஹைபர்சோனிக் ஏவுகணை 'ஒரெஷ்னிக்' (Oreshnik) உற்பத்தி முடிந்துள்ளதாகவும், அது தற்போது இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை ரஷ்யாவின் நட்பு நாடான பெலாரஸில் இந்த ஆண்டின் இறுதிக்குள் நிலைநிறுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள வாலாம் தீவில் பெலாரஸ் ஜனாதிபதி லுகாசென்கோவுடன் இணைந்து பேசிய புடின், ஏவுகணை பதுக்கப்படும் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றும், செயற்பாட்டு பணிகள் வேகமாக நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரெஷ்னிக் ஏவுகணை, கடந்த ஆண்டு உக்ரைனில் ஒரு தொழிற்சாலையைத் தாக்கி சோதனை செய்யப்பட்டது. இது Mach 10 வேகத்தில் பாயும் திறனைக் கொண்டது.
ஒரே நேரத்தில் பல ஒரெஷ்னிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தினால், அது ஒரு அணு தாக்குதலுக்கு இணையான அழிவை ஏற்படுத்தும் என புடின் தெரிவித்துள்ளார்.
இந்த ஏவுகணை வழக்கமான அல்லது அணு ஆயுதங்களையும் ஏந்திச் செல்லக்கூடிய திறனுடையது. 5,500 கிமீ வரை பாயக்கூடியது என்பதால், இது முழு ஐரோப்பாவையும் தாக்கும் திறனைக் கொண்டது.
இது 2019-இல் கைவிடப்பட்ட அமெரிக்கா-ரஷ்யா இடையிலான இடைநிலை ஏவுகணை ஒப்பந்தத்திற்குப் பின்பு வந்த முக்கிய மாற்றமாகும்.
ரஷ்யாவின் புதுப்பித்த அணு ஆயுத கொள்கை பெலாரஸை பாதுகாப்புத் தரப்பில் சேர்த்துள்ளது. பெலாரஸ் தற்போது தாக்குதலுக்கேற்ப அணு ஆயுதங்களை பயன்படுத்த முடியும் என்ற நிலையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Russia hypersonic missile Oreshnik, Oreshnik deployment in Belarus, Russia Belarus nuclear treaty, Putin Lukashenko missile deal, Mach 10 missile Russia, Russia tactical nuclear weapons, Russia missile threat to NATO, Russian intermediate-range missile