உக்ரைன் ஆயுத விநியோகத்துக்கு ஆதாரமாக இருந்த 6 ரயில் நிலையங்களை அழித்து ஷாக் தந்த ரஷ்யா! வீடியோ
உக்ரைன் படைகளுக்கு ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களை ரஷ்யா அழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி குண்டுவீசி சேதப்படுத்தியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் 2 மாதங்களுக்கு மேலாக நடந்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் படைகளுக்கு மேற்கத்திய நாட்டு ஆயுதங்கள் ரயில்கள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
கிழக்கு உக்ரைனில் இந்த ஆயுத விநியோகத்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்த 6 ரயில் நிலையங்களின் மின்சார விநியோக மையங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. இதன்மூலம் இந்த ரயில் நிலையங்கள் இயங்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.
இந்த ரயில் நிலையங்கள் வழியே எந்த நாட்டின் ஆயுதங்கள் உக்ரைன் படைகளுக்கு வழங்கப்பட்டன என்ற தகவலை ரஷ்யா தெரிவிக்கவில்லை.
இதையும் படிங்க: ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழர்! வெளிநாட்டு லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்